வெள்ளி, 2 நவம்பர், 2018

26. பெரியர்

பெரியர்



“அப்பா அப்பா… If you don’t mind, can you do me a favour?”

“Favour? ஹஹா.. ஹா.. என்ன இது புதுசா உதவி ன்னு கேக்குற.. இதுக்கு முன்னாடி உதவட்டுமான்னு கேட்டா “I’m a brilliant kid dad” ன்னு சொல்லுவ.. இப்போ மட்டும் என்னாச்சு உன் Brillianceக்கு..?”

“Dad…”

“ம்ம்ம்”

“அப்பா… Still I’m brilliant. ஆனா, இத என்னால புரிஞ்சிக்க முடியலை…”

“எங்க அந்த Tab குடு…” என்று நான் மகனின் கையில் இருந்த Tabஐ வாங்கிப் பார்த்தேன். ஒருபுறம் தாடியோடு வள்ளுவர் அமர்ந்திருக்க, அருகே ஒரு குறள் எழுதியிருந்தது.

“ம்ம்ம்… இதுல என்ன புரியலை உனக்கு…? பொருள் தான் கீழேயே இருக்கே…”

“பொருள் இருக்குப்பா.. ஆனா I don’t know how to differentiate it..!”

“Wha…t..! எத கண்டுபிடிக்க முடியலை..?”

“அரிய செயல்!? எது அரிய செயல் ன்னு எப்படி கண்டுபிடிக்குறது??”

“ஹஹா.. ஹஹா.. So finally.. எப்போயும் Brilliance உதவி பண்ணாது மை டியர்… சில சமயங்கள்ல அனுபவமும் உதவி பண்ணும்… இதுக்கு நான் நேரடியா விளக்கம் சொல்லாம ஒரு கதையா சொல்லட்டுமா… கதை கேக்க பிடிக்கும் ல?”

“அப்பா.. தெரிஞ்சிகிட்டே கேக்குறீங்களா…?”

“சரி சரி… சிணுங்காத… நான் சொல்லுறேன். The story of two monkeys lived at a same period…” என்று கதையைத் துவங்கினேன்.

“ம்ம்ம்…” என்றான் ஆர்வமாக.

“சரி.. குரங்கா இருந்தாலும் பேர் வைப்போம்… எதாவது இரண்டு பேர் சொல்லு…”

“What…? குரங்குக்குப் பேரா…?”

“Just Imagine… இரண்டையும் குரங்கு 1, குரங்கு 2 இப்படி சொல்லுறதுக்கு ஏதாவது பேரு வச்சா நல்லா இருக்கும்ல…”

“OK… ராம்…”

“ம்ம்ம்.. இன்னொரு பேர்?”

“ம்ம்ம்… ராஜ்…”

“Nicely Chosen..! ம்ம்ம்ம்… கதைக்கு போவோம்… ரொம்ப காலத்துக்கு முன்னாடி, ஒரு குரங்கு ஒன்னு இருந்துச்சு, அந்த குரங்கு நாலு குட்டி போட்டுட்டு எங்கயோ இதுங்கள விட்டுட்டு போய்டுச்சு.”

“இந்த குரங்குங்க எல்லாம் தனியா தன்னை தானே வளத்துக்க ஆரம்பிச்சதுங்க… அதுல கொஞ்சம் புத்திசாலியான வெள்ளை தல குரங்கு என்ன பண்ணுச்சுன்னா, நான் தான் உங்களைவிட உயர்ந்தவன், எனக்கு தான் தலை வெள்ளையா இருக்கு, அதனால நீங்க எல்லாரும் என்னோட சொல் படி தான் கேக்கணும்ன்னு சொல்லுச்சு. மீதம் இருந்த ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலையா பிரிச்சு கொடுத்துச்சு. ஒரு குரங்குக்கு பாதுகாவல் வேலை, இன்னொண்ணுக்கு உணவு உற்பத்தி செய்யுறது, இன்னொரு குரங்குக்கு மத்த மூணு குரங்குக்கும் ஊழியம் பண்ணுறதுன்னு…”

“ஆரம்பத்துல இத யாருமே ஏத்துக்கல, ஆனா, அந்த வெள்ளை குரங்கு என்ன சொல்லுச்சுன்னா, இது ஒன்னும் நானா செய்யல… தாய் குரங்கு தான் இப்படி சொல்லிச்சுன்னு சொல்ல, மத்த குரங்குகளும் அது சரியா தான் இருக்கும்ன்னு நம்பி அதையே பின்பற்ற தொடங்கிச்சு… காலங்கள் அப்படியே உருண்டு ஓட, அதுல ராம், ராஜ் இருவரும் பொறந்தாங்க.” என சற்று நிறுத்தினேன்.

“ப்ப்பா… continue…” என்றான் கதை கேட்கும் ஆர்வத்தில்.

“ராம் பாத்துச்சு… அப்போ வாழ்ந்த குரங்கு எல்லாம் பிரிவினையில அவதிப்படுறதயும்… அதுல வெள்ளை குரங்கு குடும்பம் மட்டும் நிறைய சலுகைகளும், பெரிய பதவிகளும் வகிக்குறதயும் பாத்துச்சு… கூடவே, ஊழியம் செய்ய பணிக்கப்பட்ட குரங்கு குடும்பங்கள் ரொம்ப மெலிஞ்சு தாழ்ந்தவங்கன்னு சொல்லப்பட்டு குழுவில் இருந்து ஒதுக்கப்பட்டு, ‘பகல்ல கண்ணுல படக்கூடாது… யாரு கண்ணுலயும் படக்கூடாது… ஆத்துல தண்ணி குடிக்கக் கூடாது…’ இப்படி பல Rules போட்டு வாழவே பயந்து பயந்து வாழுற நிலையில இருக்குறதையும் பாத்துச்சு…”

“ம்ம்ம்ம்…”

“மை டியர்.. நீ சொல்லு aren’t those monkeys equal by birth?”

“Absolutelyப்பா…”

“குட்.. அப்போ ராம் இந்த பிரிவினை எல்லாம் முட்டாள்தனம்… இதையெல்லாம் கடைபிடிக்க கூடாதுன்னு தன்னால் இயன்ற வரை விளக்கிச் சொல்லத் துவங்குச்சு… அப்போ தான் அந்த பிரிவினைகள் எல்லாம் தாய் குரங்கு உருவாக்கினதாகவும், அதை மாத்த முடியாதுன்னும் தெரியவந்துச்சு.. இதை கேட்ட அது பிரிவினையை உருவாக்கியது தாய் குரங்குன்னா, அது கண்டிப்பா தாயா இருக்கமுடியாதுன்னு சொல்லி, தன் வாழ்நாள் முழுசும் அதனோட கூட்டத்துக்கு எடுத்துச்சொல்லுச்சு ராம்…”

“சூப்பர்ப்பா… ராஜ் என்ன செஞ்சுச்சு…? ”

“சொல்றேன்… ராம் சொன்னா மாதிரி எல்லா குரங்குகளும் ஒன்னுன்னு சொல்லிட்டா, இந்த குரங்கு இந்த வேலை தான் செய்யணும்ன்னு இல்லாம… எல்லாரும் பல கலைகளைக் கத்துக்கிட்டு அத உதவியா வச்சி வேற வேலை பண்ணிக்கலாம்னு ஒரு நிலை உண்டாச்சு… இதுக்கு நிறைய கலைக்கூடங்களும் உருவாச்சு… ஆனா ராஜ்க்கு அது பிடிக்கலை. வெள்ளைக் குரங்குகளை மத்த குரங்குங்க மதிக்காம இருக்குறத நினைச்சு, எல்லாரும் அவங்கவங்க வேலையத் தானே செய்யணும்னு சொல்லி, இருந்த கலைக்கூடத்தை எல்லாம் மூடிடுச்சு…”

“என்னப்பா இது… இப்படியும் பண்ணுமா அந்த குரங்கு…? ஏன்ப்பா…? இது கற்பனை கதை தான?”

“ஹஹஹஹா… அத விடு… சரி, இப்போ Tab ல இருக்குறத பொருளோட படி…”

‘செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.’


“பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.”

“அப்போ இதுல யார் செஞ்சது அரிய செயல்…?”

“ராம் செஞ்சது தான்…”

“அப்போ இதன்படி ராம் யாரு…?”

“பெரியர்…”

“கரெக்ட்… இப்போ புரிஞ்சதா…”

“ம்ம்ம்ம் புரிஞ்சது ப்பா..! அப்போ ராஜ்… சிறியரா…?” என்றான், சிரித்தபடி.

“ஹஹஹஹா… அதுக்கு முன்னாடி உனக்கு இன்னொன்னு சொல்லவா..? உன்னோட பேரும் இந்த மாதிரி ஒரு குறள்ல இருந்து எடுத்தது தான் அறன்.. அது என்ன குறள்…? உன் பேருக்கு விளக்கம் என்னன்னு கண்டுபிடி… My dear brilliant kid, Your task is on..!” என்றேன்…

“ப்பா…” என்றான் அறன், என்னை முறைத்தபடி.

– முற்றும் –

– ஜனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக