கடவுளடி சேர்ந்தார்க்கு துன்பம் ஏது!
"யோவ் பெரிசு வந்துட்டியா. மறுபடியும் எவ்ளோ திட்டினாலும்
அசிங்கப்படுத்தி கஸ்டம் கொடுத்தாலும் கேட்க மாட்ட போல , நான் காசு கொடுத்து
ரோட் காண்ட்ராக்ட் எடுக்கிறேன் அதுல எனக்கும் கமிசன் பார்க்கிறேன்
உனக்கென்னயா" என்றான் அரசியல்வாதி பெரியவரைப் பார்த்து.
"எனக்கு எவ்ளோ கஸ்டம் கொடுக்கிறேன்னு நீ தான் சொல்ற.
அதெல்லாம் கஸ்டம்னு நான் நினைக்கலையே. எல்லாம் கடவுள் செயல்" என்றார்
பெரியவர் நேரு.
"ஒரு MLA ஆகுறது எவ்ளோ கஸ்டம். நான் 50-லட்ச ரூவா செலவு பண்ணி
வந்தா, நீ அம்பது காசு செலவு பண்ணி பேப்பர வாங்கி எனக்கு வேட்டு
வைக்கிறியா "என்று சொல்லிக்கொண்டே கோவத்தில் பெரியவரை தள்ளிவிட்டு,
அடித்தான்.
"இதுவும் கடவுள் தான் கொடுக்கிறார் போ "என்று சொல்லி மேலும் அடித்தான். அரசியல்வாதி மேல் இருந்த பயத்தால் யாரும் தட்டி கேட்க முன்வரவில்லை.
வலியுடனே எந்திரித்து, கீழே விழுந்த மூக்கு கண்ணாடியையும்,
பேப்பரையும் தூக்கிகொண்டு மறுபடியும் கோர்ட்டுக்கு சென்று கேஸ் போட்டார்
பெரியவர் நேரு.
வீட்டுக்கு அழுக்கு சட்டையோடு சென்றவரை பார்த்த அவர் மனைவி
"என்னங்க... ஏதாவது பிரச்சனை பண்ணிகிட்டே வர்ரீங்க டெய்லி "என்று அழுதாள்.
"என்னங்க... ஏதாவது பிரச்சனை பண்ணிகிட்டே வர்ரீங்க டெய்லி "என்று அழுதாள்.
லெட்சுமி "தப்ப தட்டி கேக்குறோம். அவ்வளவுதான். எல்லாம்
கடவுள் செயல் டி. கஸ்டமோ சந்தோசமோ எல்லாமே நாம பார்க்குற பார்வைலதான்"
என்றார் பெரியவர் நேரு.
இதே போல் ரோட்டில் பிளக்ஸ் வைத்தல், இலவச குடிநீரை காசுக்கு
விற்பது, பார்க்கிங் அதிகம் வசூலிப்பது, தண்ணீர் டேங்க் கட்டுவதில்
முறைகேடு என அந்த MLA செய்த அனைத்து ஊழலையும் ஆதாரத்தோடு கேஸ் போட்டார்
பெரியவர்.
பெரியவரின் செயலும் அத்தொகுதி மக்களிடம் நல்ல பெயர் சம்பாதித்து கொடுத்தது. இதை பொறுக்காத MLA ரவுடிகளை வீட்டிற்கு அனுப்பி கலாட்டா செய்து பெரியவர் மகளையும் மனைவியையும் தகாத வார்த்தையில் திட்டினர்.
பெரியவர் மகள் ரேஸ்மியோ "எங்க அப்பா தப்பதான் தட்டி கேட்டார்.
நீங்க நேர்மையா நடந்துக்குற வரைக்கும் அப்டி தான் செய்வார் "என்றாள்
தைரியமாக. ரேஸ்மியோ கல்லூரியில் கடைசி வருட படிப்புக்கு பணம் இல்லாததால்
கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாள் சில நாட்களாக.
பெரியவர் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை அறிந்தவர் கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றவரை அவர் மனைவி தடுத்து
"மக மேலையும் கம்ப்ளைண்ட் கொடு போ. பொண்ணுக்கு காலேஜ் பீஸ் கட்டவக்கில்ல ,
வாடகைக்கு காசு தர வக்கில்ல இதுல பொது சேவையாம்" என்று திட்டி தீர்த்தாள்.
ஆம் பெரியவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். குமாஸ்தாவாக
ஆருந்தவர். அவர் வருமானத்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் உயிர் மட்டுமே
பிழைக்க முடியும் உணவை உண்டு. மற்றதை நினைத்து கூட பார்க்க முடியாது.
இதையெல்லாம் பெரியவர் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், குளித்துவிட்டு கடவுள்
முன் உட்கார்ந்து பகவத்கீதை படித்துகொண்டிருந்தார்.
அவருக்கு சந்தோசமும் துன்பமும் செயல்களே. மனதை பாதிப்பதில்லை அவை.
இப்படியே பெரியவரின் போராட்டமும் தொடர அதனால் மக்களின்
செல்வாக்கும் உயர, அவள் மகளும் கல்லூரி முடித்து நல்ல வேலையில் சேர, சட்ட
மன்ற தேர்தலும் வந்து சேர்ந்தது.
இந்த முறை ஆட்சியை கைப்பற்ற போகும் என்று செல்வாக்கு பெற்ற
கட்சி பெரியவருக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்தது. தேர்தலும் முடிய
மிகபிரம்மாண்ட வாக்கு வித்தியாசித்தில் வென்றார் பெரியவர். எதிர்த்து நின்ற
ஊழல் அரசியல்வாதி படு மோசமாக தோற்றார்.
இதனால் பெரியவருக்கு அமைச்சர் பொறுப்பு வந்தது. அவரது மகளுக்கும் நல்ல வரன் வந்து வாழ்க்கை சுபமாகச் சென்றது.
அப்போதும் பெரியவர் தட்டிகேட்டர் முதல்வரே தவறு செய்தாலும்.
அமைச்சர் என்பதால் அவர் துள்ளவும் இல்லை , பந்தா காட்டவும் இல்லை . ஆம்
அவருக்கு எல்லாம் கடவுள் செயல். கடவுள் எப்படி இரண்டும் கடந்து நிற்கிறாரோ
அவ்வழியே பெரியவரும். துன்பமும் இல்லை சந்தோசம் இல்லை.
அதனால்தான் வள்ளுவர் அன்றே சொல்லிருக்கிறார்...
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"
யாண்டும் இடும்பை இல"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக